நாட்டில் அமுலில் இருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு முறையில் தினசரி கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்தால் மீண்டும் பயணத்தடையை அமுல்படுத்த நேரிடும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதே முறையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும். தொற்றாளர்கள் அதிகரித்தால் பயணத்தடை அல்லது முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.

மக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பயணத்தடை நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான தடை தொடரும். மக்களின் நலனை கருத்திற் கொண்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. தினசரி 2000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையிலேயே பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையின் நாட்டின் அடுத்தக்கட்ட நிலைமை மக்கள் கையிலேயே உள்ளது. யாருக்கு கொவிட் தொற்று உள்ளதென யாருக்கும் தெரியாது. இதனால் மக்கள் தங்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here