இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் எரிபொருள் விலையேற்றம், தேசிய பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது, வங்கி வட்டி வீதங்களை குறைந்த மட்டத்தில் வைத்திருப்பது, வெளிநாட்டு ஒதுக்கங்களின் நிலைத்தன்மையை பேணுவது மற்றும் பொதுமக்களின் சுகாதார நலன்களை மேற்கொள்வதற்காகவே நடைமுறைப்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எரிபொருள் விலையேற்றம், அரசாங்கத்தை சங்கடத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கை என குற்றம் சுமத்தியிருத்த ஜனாதிபதி அங்கம் வகிக்கும் பொதுஜன பெரமுனாவின் செயலாளர் சாகர காரியவசம், இந்த சங்கட நிலைக்கு பொறுப்பற்று அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதனையடுத்து இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அமைச்சர் உதய கம்மன்பில, விலையுயர்வு தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் எடுத்த முடிவை, ஊடகங்களுக்கு தெரிவித்த விடயத்தை மட்டுமே தாம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்தே ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கை வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here