உலகில் தற்போது காணப்படும் அனைத்து வகையான கோவிட் வைரஸ் திரிபுகளும் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை அரச வைத்திய உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதேவேளை, கோவிட் வைரஸ் திரிபுகள் தொடர்பிலான சோதனைகளை சீரற்ற முறையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் வைத்தியர் கிசாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டில் தினசரி கோவிட் மரணங்கள் 100 முதல் 200 வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள அல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா ஆகிய திரிபு வைரஸ் வகைகளுடன் லேசான, மிதமான மற்றும் அபாயகரமான வைரஸ் திரிபுகள் நாட்டில் பரவி வருகின்றது.

கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் சீரற்றவையாக இருப்பதால் இந்த நிலைழைமயை எப்போதும் தடுக்க முடியாது.

நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினாலும் அவை ஊடகங்களின் சித்தரிப்பு மட்டுமே ஆகும்.

பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறந்த நிலையிலேயே இருக்கின்றன. வீதிகளில் பொதுமக்கள் அதிகமானோர் காணப்படுவதால் பாரிய தொகை நிதியினை செலவிட்டு அரசாங்கத்தால்      தொடங்கப்பட்ட ஸ்ட்டிக்கர் ஒட்டும் முறை பயனற்றதாகிவிட்டது.

இந்த நிலைமை பல உப கொத்தணிகளை உருவாக்க வழிவகுக்கும். எனவே தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உதவாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here