அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியில் இலங்கைக்கு 600,000 குப்பிகளை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்த ஜப்பான் மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பில் உள்ள ஜப்பானியத் தூதரகத்தை ஆங்கில ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு வினவிய போதே தூதரகம் அதனை உறுதிப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
ஜப்பானில் தயாரிக்கப்படும் சுமார் 30 மில்லியன் குப்பி தடுப்பூசிகளை ஜப்பான் கோவாக்ஸ் வசதி மூலம் பிற நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் ஒதுக்கும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
பொருத்தமான நேரத்தில், ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் சுமார் 30 மில்லியன் குப்பிகள் தடுப்பூசிகளை ஜப்பான் கோவாக்ஸ் வசதி உட்படப் பிற நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் ஒதுக்கும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த புதன்கிழமை, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, எஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசியின் 600,000 அளவுகளுக்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஜப்பான் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்திருந்தது.
இந்த கோரிக்கையை ஜனாதிபதி ராஜபக்ச ஜப்பானியப் பிரதமர் யோஷிஹைட் சுகாவிடம் முன்வைத்திருந்தார்.
இந்தநிலையில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதர் சுகியாமா அகிரா மற்றும் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு இடையே புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜப்பானியப் பிரதமரின் பதில் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.