நாட்டில் எதிர்வரும் 14ம் திகதி பயணத்தடை தளர்த்தப்படும் என்பதனை பொலிஸ் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
எதிர்வரும் 14ம் திகதி திங்கட்கிழமை வரையிலேயே தற்பொழுது அமுலில் உள்ள பயணத்தடை நீடிக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மட்டுமே பயணத்தடை அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், பயணத்தடை குறித்த சட்டங்கள் இந்த நாட்களில் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மூன் நாட்களுக்கு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பயணத்தடை சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 29000 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பயணத்தடை நீடிக்கப்படாது என நேற்றைய தினம் இராணுவத் தளபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பயணத்தடையை எதிர்வரும் 21ம் திகதி வரையில் நீடிக்குமாறு சுகாதார தரப்பினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் நாட்டில் கோவிட் காரணமாக 101 மரணங்கள் பதிவாகியுள்ளன.