அரசாங்கம் எந்தக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது என்பதை அறிய முடியவில்லை என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டையும், நாட்டு மக்களையும் கடவுள் தான் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய அரசாங்கம் கோவிட் – 19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொது மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் முறையான கொள்கை திட்டங்களை வகுக்கவில்லை.
சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயற்பாட்டை பலமுறை சுட்டிக்காட்டியும் எவ்வித மாற்றமும் இதுவரையில் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.