தற்போதுள்ள கோவிட் பரவல் தொடர்பான தரவுகளை ஆராய்ந்து நிபுணர்களுடன் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலில் தீவிரமான சூழ்நிலை இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே 14ஆம் திகதி அதிகாலை பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தினம் சிங்கள பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செய்திகளில், எதிர்வரும் 14அம் திகதியுடன் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு 23 நாட்கள் ஆகின்றதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிபுணர்களின் ஆலோசனைப்படி பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது மிகவும் பொருத்தமானது என்று தீர்மானிக்கப்பட்டதால் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தற்போதுள்ள தரவுகளை ஆராய்ந்து நிபுணர்களுடனான கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின் எந்தவொரு தீவிரமான சூழ்நிலையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே பயணத்திற்கான தற்போதைய கட்டுப்பாடுகள் 14ஆம் திகதி நீக்கப்படும் என சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here