கொழும்பில் உள்ள பிரதான பௌத்த விகாரை ஒன்றில் இரகசியமான சில அரசியல் சந்திப்புகள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில நபர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமையில் இந்த சந்திப்பு நடந்துள்ளதாகவும், பிரபலமான சில பௌத்த பிக்குகளில் ஒத்துழைப்பும் இதற்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த பிக்குகளில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட பிரபலமான இரண்டு பிக்குகள் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் இரண்டு பிக்குமாறும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர். அடுத்த தேர்தலை இலக்கு வைத்து புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக இருந்து வருகிறது.

இந்த இரகசிய சந்திப்பில் கலந்துக்கொண்ட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், தான் எதிர்பார்த்த உயர் பதவி கிடைக்காததால், அதிருப்தியடைந்துள்ள நபர் எனக் கூறப்படுகிறது.

அத்துடன் அவர் இதற்கு முன்னர் பல கட்சிகளில் அங்கம் வகித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பதவி வகித்தவர் என்பதுடன் ,கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.

இந்த இரகசிய சந்திப்பை ஒருங்கிணைத்தவர்களில் அரசாங்கத்திற்கு ஆதரவான முக்கியமான இரண்டு பேர் இருப்பதாகவும் பேசப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here