பொதிகள் மற்றும் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் புதிய செயற்றிட்டமொன்று தபால் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பிரதி தபால்மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளதாவது, “பொருட்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் பணத்தை செலுத்தும் வகையில் இந்த சேவையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கணினி மயப்படுத்தப்பட்ட தபால் அலுவலகங்கள் ஊடாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனூடாக சந்தைகளுக்கு செல்வதை தவிர்த்து தமக்கு தேவையான பொருட்களை மக்கள் வீடுகளிலிருந்தே பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.

குறித்த செயற்றிட்டத்தின் முதற்கட்டத்தில் 50,000 ரூபாய் வரையான பெறுதியுடைய பொருட்களை வீடுகளில் பெற்றுக்கொள்வதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆரம்பத்தில் பணக்கொடுக்கல் வாங்கல் மாத்திரமே முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் காலத்தில் கடன் அட்டைகளுக்கும் பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here