இலங்கைக்கு கொரோனா வைரஸ் மருந்து கூடிய விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என கொரோனா வைரஸ் விவகாரங்களிற்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் மருந்தினை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மருந்துகளும் இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளன என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் எந்த மருந்திற்கும் இன்னமும் அனுமதி வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர், உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரமளித்ததும் மிகச்சிறந்த மருந்தினை இலங்கை அரசாங்கம் தெரிவு செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மருந்துகள் குறித்த முக்கியமான விஞ்ஞான ரீதியிலான தரவுகள் இலங்கைக்கு இன்னமும் கிடைக்கவில்லை எனவும் அவர தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் அதேவேளை கொரோனா வைரஸ் மருந்துகளிற்கு அனுமதியளிப்பதற்கு இன்னமும் சில வருடங்களாகும் என்பதையும் அறிந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here