கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிலாபம்- ஆராச்சிகட்டுவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர், மேலதிக சிகிச்சைக்காக வத்துபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த பெண்ணுடன் பணியாற்றிய மேலும் 10பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய ஏனையவர்களை கண்டறியும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here