நத்தார் மற்றும் புதுவருடப்பிறப்பு பண்டிகையின் போது பொது மக்களின் பல்வேறு தேவைகளுக்கு நிவாரண வட்டி விதத்தில் கடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “3 கட்டமைப்பின் கீழ் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் ஓய்வுப் பெற்ற அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் பண்டிகை காலத்தில் பண்டிகை கால கடன் வழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.

எனினும், தற்போது தனியார் துறைக்கும் அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கிகளின் ஊடாக இந்த கடனுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவோர், தனது நிறுவனத்தின் பிரதம அதிகாரியின் கையெழுத்துடனான விண்ணப்பத்தை, அருகிலுள்ள அரச வங்கிகளில் கையளிப்பதன் ஊடாக இந்த கடனுதவியை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று, முச்சக்கரவண்டி, பாடசாலை வேன்கள், பஸ்களின் உரிமையாளர்கள் மற்றும் தனியார் பஸ்களின் பணிப்புரியும் பணியாளர்கள், அரச வங்கிகளில் வங்கி கணக்குகளை வைத்திருக்கும் பட்சத்தில், அவர்களும் இந்த கடனுதவியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, குறித்த பிரிவைச் சேராதவர்கள், அரச வங்கிகளில் வங்கி கணக்குகளை வைத்திருந்தால், அவர்களும் இந்த பண்டிகை கால கடனை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியும்

ஓய்வு பெற்றோர் மற்றும் சமுர்த்தி பெறுவோருக்கு, ஓய்வூதிய திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக கடன் வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருடம் ஆகியவற்றை முன்னிட்டு, பண்டிகை கால கடன் அடிப்படையில் 0.625 வீத வட்டியின் கீழ் 10 மாதங்களில் செலுத்தி முடிக்கும் வகையில் இந்த கடன் வழங்கப்படவுள்ளது.

மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாவிற்கு அதிக வருமானத்தை பெறுவோருக்கு 50 ஆயிரம் ரூபாவும், மாதாந்தம் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபா வரை பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாவும், மாதாந்தம் 25 ஆயிரம் ரூபாவிற்கு குறைவான வருமானத்தை பெறுவோருக்கு 10 ஆயிரம் ரூபாவும் கடனாக வழங்கப்படவுள்ளது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here