இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 91 வயதான ஆணொருவர், டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானமையினால் ஏற்பட்ட மாரடைப்பு நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை கைதியான 53 வயதான ஆணொருவர், டிசம்பர் மாதம் 01ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடை பிரதேத்தைச் சேர்ந்த 56 வயதான பெண்ணொருவர், தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற வேளையில், டிசம்பர் மாதம் 04ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான பெண்ணொருவர், 2020 நவம்பர் மாதம் 28ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுடன் ஏற்பட்ட கடுமையான நுரையீரல் நோய் மற்றும் இருதய நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவர், டிசம்பர் 04ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுடன் நிமோனியா நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை கைதியான 66 வயது ஆணொருவர், சிறைச்சாலை வைத்தியசாலையில் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி உயிரிழந்துள்ளார் மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுடன் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான பெண். தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் சிகிச்சைப் பெற்ற வந்த நிலையில் 2020 டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு அதி உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் 19 நிமோனியா நிலைமையுடன் உறுப்புகள் செயலிழந்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here