தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப்பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்து 172 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்கள் எவராயினும் கைது செய்யப்படுவார்கள்.
அதேபோன்று அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்