கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலையடுத்து தீர்மானிக்கப்பட்ட திகதியில் சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு முடியாது என கல்வி அமைச்சர் ஏற்கனவே  அறிவித்திருந்தார்.

எனினும் பரீட்சைக்கான புதிய திகதியை அறிவிப்பதாகவும் கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்j நிலையில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தரபரீட்சையை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும் பரீட்சை நடைபெறும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here