இலங்கையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட 337 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகளவிலானோர் அதாவது 189 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 47 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புத்தளம் மற்றும் நுவரெலியாவைச் சேர்ந்த தலா 11 பேரும் கண்டியைச் சேர்ந்த 08 பேரும் அதில் அடங்குவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் களுத்துறை மற்றும் குருநாகலைச் சேர்ந்த 06 பேரும் இரத்தினபுரியைச் சேர்ந்த 03 பேரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு பொலன்னறுவை, அனுராதபுரம் காலி மற்றும் கிளிசொச்சியில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை 33 பேர் பொலிஸ் அதிகாரிகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இருவரும் அடங்குகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 508 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 14 ஆயிரத்து 497 பேர் குணமடைந்துள்ளதுடன் 5 ஆயிரத்து 921 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 90 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here