ஜா-எல பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றின் பூசகர் கோயிலுக்குள் உயிரிழந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளிடம் இருந்து ஜா-எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் நேற்று முன்தினம் சடலத்தை மீட்டுள்ளனர்.

54 வயதான கோயில் பூசகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரியவருகிறது.

உயிரிழந்த நபரின் மரணத்திற்கான காரணத்தை அறிய PCR பரிசோதனை மற்றும் பிரேதப் பரிசோதனைகளை நடத்துமாறு ராகம திடீர் மரண விசாரணை அதிகாரி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து உடல் ராகமை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here