களுத்துறை போத்துவாவத்த பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அந்த பகுதி இன்று முதல் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.குறித்த வர்த்தக நிலையத்திற்கு வந்து சென்றவர்கள், வர்த்தகருடன் தொடர்பை பேணியவர்கள் என பலர் அப்பிரதேசத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.