யாழ்ப்பாணம் நயினாதீவுக் கடல் மட்டம் திடீரென உயர்ந்ததில் அவ் வீதியூடான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக கடல் மட்டங்கள் உயர்வடைந்து அசாதாரண சூழ்நிலை காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இவ்வாறு உயர்வடையும் கடல் நீர் மக்கள் குடியிருப்புக்களுக்கும் புகுந்து பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந் நிலையில் நயினாதீவு கடல் மட்டமும் உயர்வடைந்து வீதியை மேவியுள்ளதால் அப் பகுதியூடான போக்குவரத்துக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here