இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வடைந்துள்ளது.
84 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த பெண் கொவிட் நியூமோனியாவினால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.