P..C.R பரிசோதனை என்றால் என்ன?
மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
PCR எனப்படுவது Polymerase Chain Reaction என பொருள்படுகின்றது.
ஒவ்வொரு உயிரினத்தின் செல்களிலும் DNA, RNA (நியூக்ளிக் அமிலங்கள்) என இரண்டில் ஒன்று அல்லது இரண்டும் என ஏதாவது ஒன்றோ கண்டிப்பாக இருக்கும்.
அதுதான் அந்த உயிரினம் எப்படி வளர வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பதனை தீர்மானிக்கிறது.
ஒவ்வொரு உயிரினத்திற்கும் இது மாறுபடலாம்.
பெரும்பாலான உயிரினங்களில் DNA இருக்கும்.
அதேநேரம் சில வைரஸ் போன்ற கீழ்நிலை உயிரினங்களில் RNA மாத்திரமே இருக்கும்.
இந்த DNA வை வைத்து கிருமியைக் கண்டுபிடிப்பதுதான் PCR Test என அழைக்கப்படுகின்றது.
முன்னர் காச நோய் உட்பட பல நோய்க்கிருமிகளைக் கண்டறிய இம்முறை கையாளப்பட்டு வந்துள்ளது.
வைரஸின் RNA ஐ DNA ஆக மாற்றி அதன்மூலம் அது எந்த வகையான வைரஸ் என கண்டறிவதே RT – PCR எனப்படுகின்றது.
கொவிட் – 19 வைரஸ் ஒரு RNA வைரஸ் வகையை சார்ந்தது.
அது கிருமிதானா என கண்டறிந்து உறுதி செய்யவே RT – PCR பரிசோதனை பயன்படுகிறது.
தொண்டை அல்லது மூக்கில் தடவி மெல்லிய சளி மாதிரியைஅல்லது செல்கள் எடுக்கப்பட்டு இந்த RT – PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இப் பரிசோதனையின் முடிவுகள் 4 – 6 மணித்தியாலங்களில் தெரிய வரும்.