மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட செங்கலடியில் வியாபாரம் செய்யும் மட்டக்களப்பை சேர்ந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று பீசிஆர் பரிசோதனையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து தற்போது கிழக்குமாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.