உலக மக்கள் அனைவரும் இடர் நீங்கி நலமோடு வாழ வேண்டி, நாடளாவிய ரீதியில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ஒரே நேரத்தில் விசேட பூஜை, வழிபாடுகளில் ஈடுபடுமாறு பிரதமரும் புத்தசாசன அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதன்படி, கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி பௌத்த விஹாரைகள், இந்துக் கோவில்கள், கிறிஸ்தவ, இஸ்லாம் வணக்கஸ்தலங்களிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை 5 மணி மதல் 6 மணி வரை ஒரே நேரத்தில் விசேட பிரார்த்தனை, வழிபாடுகளில் ஈடுபடுமாறு அவர் கோரியுள்ளார். மேலும், மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.