யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 248 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார்.

இரு பெண்களுக்கும், சிறுவன் ஒருவனுக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேற்படி மூவரும் பேலியகொடை மீன் சந்தை பகுதிக்கு சென்று வந்ததன் காரணமாக தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறுபவரின் உறவினர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here