நாட்டில் கொரேனா தொற்று காரணமாக 24 ஆவது மரணம் பதிவாகியுள்ளது.
கொழும்பு 13 ஐ சேர்ந்த 79 வயதான பெண் ஒருவரே நேற்று மாலை அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் சுமார் ஒரு மாதத்திற்கும் அதிகமாக நோய் நிலைமையினால் பீடிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளதுடன் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொழும்பு 13 ஐ சேர்ந்த 78 வயதான மற்றுமொறு ஆண் நபர் அவரின் வீட்டில் விழுந்துள்ள நிலையில் கடந்த இரண்டாம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இவரின் உயிரிழப்பிற்கு கொவிட் -19 தொற்று காரணமாக அமையாதமையினால் இம் மரணம் கொரோானா தொற்று மரணமாக பதியப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.