இலங்கையில் இன்றைய தினம் இதுவரையில் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சற்று முன்னர் வெளியான பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் இன்றைய தினம் மேலும் 137 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதில் ஐந்து பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 132 பேரும் தொற்றாளர்களுடன் தொடர்பு பேணியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இன்யை தினம் மொத்தமாக 409 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,744 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 332 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
