ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படமாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு கடந்த வாரங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதால், வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை அமுலாக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் நிபந்தனைகளின் அடிப்படையில் பொருட்களை விநியோகிக்கலாம். அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தகவல்களைப் பெற முடியும். மொத்தமாக 89 அரச நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டைகளை ஊரடங்குச்சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here