
நாட்டுக்குள் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் உப கொத்தணிகள் ஏற்படும் பாரிய அச்சுறுத்தலை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மினுவங்கொடை கொரோனா கொத்தணியின் பின்னர் அதன் உப கொத்தணிகள் பல இடங்களில் கண்டறியப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் பல பகுதிகளின் 20 முதல் 30 நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். இந்த உப கொத்தணிகள் சுகாதார துறையின் கட்டுப்பாட்டை மீறி செல்லாத வகையில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியில் செல்ல முயற்சிக்க வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும், கொரோனா வைரஸை வீட்டுக்குள் கொண்டு சென்று வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை அந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காக வேண்டாம் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது