மினுவாங்கொட கொரோனா பரவலுடன் ஏற்பட்ட கொரோனா தொற்றானது இதற்கு முன்னர் இலங்கையில் பரவியதா அல்லது வேறு வைரஸா என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு விஞ்ஞான ரீதியான பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தற்போது நாடு முழுவதும் பரவி வரும் ரைவஸ் மிகவும் வேகமாக பரவும் ஆபத்தான வைரஸ் போன்று காணப்படுகின்றது. இது தொடர்பான பரிசோதனை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதற்கமைய கந்தகாடு, மினுவாங்கொட பரவல் மற்றும் பேலியகொடையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டது.சீதுவையில் 5 நட்சத்திர ஹோட்டலில் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட யுக்ரேன் விமானம் ஊழியர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியது.அது நூற்றுக்கு 80 வீதம் சரியானதெனவும், மேலும் சில முறைகள் ஊடாக அதனை உறுதி செய்வதற்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.துருக்கியில் இருந்து வந்த யுக்ரேன் விமான சேவை ஊழியர்களுக்கு உதவி செய்த ஹோட்டல் ஊழியர்கள் மூலம் மினுவாங்கொட கொரோனா பரவல் ஏற்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here