4 பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொரோனா!

நாரஹேன்பிடயில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேருக்கு மற்றும் தொழில் அமைச்சின் சாரதி ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த தினம் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்ற அந்த திணைக்கள கட்டடத்தின் உணவக பணியாளரிடம் இருந்து அவர்களுக்கு கொரோனா பரவியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை, வெள்ளவத்தைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதி ஒன்றில் தங்கியிருந்து இந்நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 70 வயதுடைய இந்திய நாட்டவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here