
கொட்டகலை பிரதேசசபைக்கு உட்பட்ட வட்டகொடை, யோக்ஸ்போட் தோட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் பத்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு இலக்கான நபருடன் தொடர்பை பேணியவர்கள் விபரமும் திரட்டப்பட்டு வருகின்றன.
இவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பிரகாரமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் கடந்த சில தினங்களில் வட்டகொடை நகரத்தின் சில இடங்களுக்கு சென்று வந்தும் உள்ள நிலையில் வட்டகொடை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.