பதுளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 120 பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஹப்புத்தளை, தியதலாவை, பண்டாரவளை மற்றும் கஹகொல்ல பகுதிகளில் கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் பேலியகொட மீன் சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதன்படி, ஹப்புத்தளையில் ஒருவரும், தியதலாவையில் மூவரும், பண்டாரவளையில் 19 பேரும் கஹகொல்லயில் ஒருவரும், திக்கராவையில் ஒருவரும், பிந்துனுவெவயில் ஒருவரும் கொவிட் 19 நேர்மறை தொற்று உடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

தியதலாவையில் உள்ள மருந்தகம் ஒன்றில் மருந்துகளை கொள்வனவு செய்தவர்களில் மூவருக்கே கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

தியதலாவை பியந்த மீன் விற்பனையகத்தை சேர்ந்த ஒருவரின் புதல்வர் குறித்த மருந்தகத்தின் பணியாளராக இருந்துள்ளார்.

அதேவேளை, கெலிஒயவிலிருந்து கொவிட் தொற்று உள்ள ஒருவர் கடந்த 13 ஆம் திகதி நோய் அறிகுறிகளுடன் பண்டாரவளை நகருக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here