
குருநகர் மற்றும் பருத்தித்துறைப் பகுதிகளைச் சேர்ந்த இருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று (26) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் கடந்த வாரம் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று கிடைத்துள்ள நிலையில் அவர்களுக்குக் கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.