முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
விசாரணைகளில் நிமித்தம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இன்று(சனிக்கிழமை) காலை அவர் முன்னிலையாகியுள்ளார்.
இதற்கு முன்னரும் அவர் பல தடவைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.