போதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.மதுஷிற்கு சொந்தமான கோடிக்கணக்கான பணம் 7 பேரின் வங்கிக் கணக்கில் உள்ளதாக பாதுகாப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.அந்த பணம் பெற்றுக் கொண்ட மற்றும் பெற்றுக் கொள்ளும் நபர்கள் தொடர்பில் தற்போது தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.போதைப் பொருள் ஊடாக சம்பாதித்த பணத்தில் அவர் கொள்வனவு செய்த பல வாகனங்கள் இலங்கையில் 9 பேரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பிலும் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.கடந்த வாரம் சிறையில் இருந்த மாகந்துரே மதுஷை பொலிஸார் அழைத்து சென்ற வேளையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மதுஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here