தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையம் மூடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் வழமையான சேவைகளுக்காக மீள திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தொற்று நீக்கம் செய்யப்பட்டதன் பின்னரே குறித்த பொலிஸ் நிலையம் வழமையான சேவைகளுக்காக மீள திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.