குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழங்கும் கடவுச் சீட்டு முறைமையில் மாற்றம் கொண்டு வந்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஜனவரி முதல் சகல நாடுகளுக்கான கடவுச் சீட்டு மாத்திரமே வழங்கப்படும் என்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் இதுவரை விநியோகித்து வந்த கடவுச்சீட்டு எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் வழங்கப்படமாட்டாது எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு இறுதிப் பகுதியில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவிருப்பதால், திணைக்களம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் வஜிர லியனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here