தனியார் பஸ்ஸில் பயணம் செய்யும் அழகிய பெண்களையும், பாடசாலை மாணவிகளையும் கையடக்கத் தொலைபேசியில் திருட்டுத் தனமாக வீடியோ எடுத்த வந்த பஸ் நடாத்துனர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 3 கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளதாக மீடியாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பஸ் நடாத்துனர் தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

பெண்களும் பாடசாலை மாணவிகளும் பஸ்ஸிலிருந்து இறங்கும் போது பஸ்ஸின் இறங்கு படியிலிருந்து இரகசியமான முறையில் வீடியோ எடுத்த காட்சிகளை இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து பொலிஸார் பெற்றுள்ளனர்.

வெளிநாட்டவர்களுக்கு காட்டுவதற்காக இது போன்ற காட்சிகளை பதிவு செய்வதாகவும், சில தனியார் பஸ்களில் இந்த நடைமுறை ஒரு வியாபாரமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

இதனால், பஸ்களில் செல்லும் பெண்களை அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here