சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்ற யாத்திரியர்கள் மீது கற்கள் புரண்டுடதால், இரு யாத்திரியர்கள் காயமடைந்து டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காயமடைந்தவர்கள் தங்கல்ல மற்றும் கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த 26,27 ஆகிய வயதுகளுடைய ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாவர்.
சிவனொளிபாதமலைக்கு சென்று சமய நிகழ்வுகளை முடித்துவிட்டு மீண்டும் திரும்பும் போது, சிவனொளிபாதமலை – நல்லதண்ணி பிரதான பாதையில் “மஹாகிரிதம்ப” எனும் இடத்தில் இவ்வாறு பாரிய சத்தத்துடன் கற்கள் புரண்டுள்ளது.
சிவனொளிபாதமலை பகுதியில் “மஹாகிரிதம்ப” எனும் இடத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டிருந்தது. அதே இடத்திலேயே இம்முறை மீண்டும் கற்கள் புரண்டுள்ளதாக யாத்திரியர்கள் தெரிவித்துள்ளனர்.