நாட்டில் இன்று பொறுப்புக்கூறக்கூடிய தலைமைத்துவம் ஒன்று இல்லாது போய்விட்டதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
ஜனாதிபதி -பிரதமர் இடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன. ஜனாதிபதி சொல்வது ஒன்று செய்வது வேறொன்று எனவும், பிரதமர் நாட்டின் குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஆட்சி நடத்தி வருகின்றார் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியின் பொறுப்பினை மிகவும் சரியாக செய்து வருவது எமது கட்சியே ஆகம். மக்கள் விடுதலை முன்னணியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியின் உண்மையாக பொறுப்பினை சரியாக செய்து வருகின்றோம். மக்களின் நேரடியான பிரச்சினைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே கலந்துரையாடி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.