அரச தனியார் பஸ் கட்டணங்கள் 4.2 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைச்சர்அர்ஜூண ரணதுங்க பஸ் உரிமையாளர்களுடன் நடத்தியபேச்சுவார்த்தையில் கட்டணக்குறைப்புப்பற்றிய தீர்மானம் எட்டப்பட்டது.

எவ்வாறேனும், குறைந்தபட்ச கட்டணமான 12 ரூபாவில் மாற்றம் இருக்காதென ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

பஸ்கட்டணங்கள் குறைக்கப்படுவதால், முச்சக்கரவண்டிகட்டணங்களையும், பாடசாலை வேன் கட்டணங்களையும் குறைப்பதற்கு குறித்த சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி முச்சக்கர வண்டிகளில் முதல்கிலோ மீற்றர்களுக்கான கட்டணம் 50 ரூபாவாக இருக்கும்.

இதேவேளை பாடசாலை வேன்களுக்கான கட்டணம் மூன்று சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here