வவுனியாவில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் உடைகளை விற்பனை செய்யும் பகுதிகளுக்கு பெண் ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று வவுனியா நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.வவுனியாவில் உள்ள ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் ஆடைகளை விற்பனை செய்யும் பகுதிக்கு பெண் ஊழியர்களை நியமிக்கவேண்டும் என்று சிலர் வேண்டுகோள் முன்வைத்திருந்தனர். அதற்கமைவாக கலாசாரத்தை பேணிப்பாதுகாப்பதற்கும், பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தவிர்த்துகொள்வதற்கும் ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் ஆடைகளை விற்பனை செய்யும் பிரிவுக்கு பெண் ஊழியர்களை நியமிப்பதே சிறந்தது.

இதற்கு சில வர்த்தகர்களும் ஒத்துழைப்பதற்கு தயாராகவுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வவுனியா வர்த்தகசங்கம், வர்த்தகர் நலன்புரிசங்கம் ஆகியவற்றுடன் பேச்சு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here