ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (26) நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன.
தமது பல்வேறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக புகையிரத எஞ்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
புகையிரத எஞ்சின் சாரதிகள் சங்கம், கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், நிலையப் பொறுப்பாதிகாரிகள் சங்கம் என பல சங்கங்கள் இந்த போரட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமது பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த போக்குவரத்து அமைச்சர் இதுவரையில் சாதகமான முடிவொன்றை அறிவிக்காததனால் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் தொடங்கொட தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கயிறிழுப்பில், இடையில் பாதிக்கப்படப் போவது அப்பாவிப் பொது மக்கள் தான் என்பது கசப்பான உண்மையாகும்.