கிராமம் கிராமமாக சென்று பொது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் தேசிய வேலைத்திட்டமொன்றை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாரித்துள்ளது.இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனையின்படி இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மக்கள் மத்தியிலுள்ள தமது கட்சி அரசியல் சூட்டை பாதுகாப்பதற்கும், அதனைத் தேர்தல் வரை எடுத்துச் செல்வதற்கு ஒவ்வொரு கட்சியும் திட்டம் தீட்டுகின்றது. என்னதான் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், இன்று நம் நாட்டு மக்கள் அரசியல் விடயத்தில் நிறையவே பாடம் படித்துள்ளார்கள் என்பது மட்டும் குறிப்பிட்டுக் கூற வேண்டிய உண்மையாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here