இலங்கையில் இருந்து நாளாந்தம், சுமார் 100 பெண்கள் வீதம் சுற்றுலா விசா மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்கு செல்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர், 5க்கும் குறைவான வயதுடைய பிள்ளைகள் தாய்மார் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.

இந்தநிலையில், 5 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளின் தாய்மார் வௌிநாடுகளுக்கு செல்வது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தாம் எதிர்பார்க்கப்பதாகவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பணிகளின் நிமித்தம் வௌிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்வதைத் தடுக்கும் வகையில், புதிய சட்டமொன்றை தயாரிப்பதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here