பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசேட அதிரப்படையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது அவர் மறைத்து வைத்திருந்த ஐஸ் என்ற போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் ஒரு தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பத்மினி என்ற 34 வயதான குறித்த பெண்ணின் கணவரும் போதைப்பொருள் மோசடி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர் என தெரியவந்துள்ளது.

அண்மையில் காவல்துறை அதிரடிப்படையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மஞ்சு என்ற பாதாள குழுவின் உறுப்பினரான இந்த பெண், பல பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளவர் என காவல்துறை அதிரடிப்படையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாளிகாவத்தை – ஜூம்மா சந்திக்கு அருகில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, இவரது கணவரின் செயற்பாடாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

இந்த சம்பவத்தில் 31 வயதான பெண்ணொருவர் உயிரிழந்தார்.

கைதான பெண்ணின் கணவர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துர மதூஷின் உதவியாளர் என்பதுடன், அவர் கடந்த மாதம் மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடனும் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here