வவுனியா பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை நேற்று மாலை முதல் காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை 5 மணிமுதல் வவுனியா தேக்கவத்தைப்பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் சாம் எனும் 15 வயதுடைய  தரம் 10இல் கல்வி கற்கும் தனது மகனை காணவில்லை என நேற்று இரவு 9மணியளவில் அவனது பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அம்முறைப்பாட்டில் வீட்டிலிருந்து தனது உடுதுணிகள் சிலவற்றையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here