மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்திற்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது.
இதனால் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
அணைக்கட்டிற்குக் கீழ் பகுதியில் ஆற்றைப் பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.