முன்னாள் தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று மாலை உயிரிழந்த செய்தி வெளியானதும் முல்லைத்தீவு நகரில் வெடிகொழுத்தி ஆரவாரம் செய்துள்ளார்கள்.இன்று 07.08.18 மாலை 7.00 மணியளவில் முல்லைத்தீவு நகர்பகுதியில் மக்கள் வர்த்தகர்கள் சிலர் இணைந்து வெடிகொழுத்தி தங்கள் ஆரவாரத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பிற்கு கருணாநிதியும் காரணமாக இருந்தார் என்றும். அவர் நினைத்திருந்தால் ஈழத்தமிழ் மக்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கமுடியம் என்றும் தமிழர்களின் இன அழிப்பிற்கு காரணமாக அமைந்த ஒரு காரணத்திற்காக அவரின் இறப்பிற்கு மகிழ்ச்சி வெளிப்படுத்தி வெடிகொழுத்தி கொண்டாடியுள்ளதாக வீதியில் நின்ற மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இருந்த போதிலும் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணி போற்றத்தக்கது எனவும் வெடிகொழுத்திய மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here