கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரயோக விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன இன்று (07) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
340 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டிடம் நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடமாக விளங்குகிறது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், உயர் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் விஜேதாசராஜபக்ச, கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் கலாநிதி மொஹான் விஜேவிக்ரம, கிழக்குப் பல்கலைக்கழ முதல்வர் வீ. கனகசிங்கம் உட்பட திணைக்கள உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.